Enable Javscript for better performance
குடிநீர்த் திட்டப் பணிகள்:அதிகாரி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்து மாநில ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார். நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மாநில ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பாஸ்கரன் புதன்கிழமை ஆத்தூர்குப்பம் ஊராட்சியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஓரிரு நாள்களில் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது ஊரக வளர்ச்சி திட்ட கூடுதல் இயக்குநர் ராஜாமணி,மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மனோகர்சிங், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபி, அப்துல் கரீம், ஒன்றியக் குழுத் தலைவர் பாரதிராஜா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தனலட்சுமி, அசோகன் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai