Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடக்கினர்.

    மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 2-ஆவது நாள் போராட்டமாக அடையாள உண்ணாவிரதத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மேற்கொண்டனர்.

    சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜசேகர், பொருளாளர் ஆண்டாள், செயலர் முரளிதாஸ் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

    மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை இவர்கள் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai