Enable Javscript for better performance
திருப்பதி- திருமலை படித் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பதி- திருமலை படித் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    By வேலூர்,  |   Published on : 17th April 2015 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பதி திருமலை படிவிழா அறக்கட்டளை சார்பில் திருமலையில் நடத்தப்பட்ட 46-ஆம் ஆண்டு படித் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றதாக அறக்கட்டளை நிறுவனர் ஆ.செ.நரசிம்மய்யர் தெரிவித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திரளான பக்தர்கள் படிகள் வழியாக நடந்து சென்று தரிசனம் செய்யும் நிகழ்ச்சியை திருப்பதி திருமலை படிவிழா அறக்கட்டளை குழு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு படித் திருவிழாவையொட்டி கடந்த 13-ஆம் தேதி மாலை 5 மணியளவில் திருப்பதி பூதேவி சத்திரத்தில் தொடர் பஜனை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் பங்கேற்க வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    14-ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆற்காடு சம்பத் குழுவினரின் நாதஸ்வர இசையுடன், இமயமலைச் சாரல் கங்கோத்ரி அனந்த விபூஷித சுவாமி ஸ்ரீநாராயண தீர்த் தலைமையில் படி பூஜை தொடங்கியது.

    பெண்கள் அனைவரும் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜை நடத்த, அதைத் தொடர்ந்து பக்தர்கள் படியேறினர்.

    திருப்பதி மலையை அடைந்ததும் பஜனைக் குழுவினர் நான்கு மாட வீதிகளில் சிறப்பு பூஜையுடன் பஜனை பாடல்களைப் பாடினர்.

    இந்தப் படி பூஜை விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர் என நரசிம்மய்யர் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai