Enable Javscript for better performance
தீத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீ விபத்துத் தடுப்பு, தீ பாதுகாப்புத் தொண்டு நாள் விழிப்புணர்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    தீ விபத்துத் தடுப்பு, தீ பாதுகாப்பு தொண்டு நாள் விழிப்புணர்வுப் பிரசாரம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    தினந்தோறும் ஆம்பூர், அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு தீயணைப்புத் துறையினர் சென்று தீ விபத்தைத் தடுக்க பாதுகாப்பான வீட்டுப் பராமரிப்பு பழக்கத்தினை பின்பற்ற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டுமென விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உமர்சாலை பகுதியில் வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர். வீடுகள், கடைகளில் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai