Enable Javscript for better performance
தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

    By வேலூர்  |   Published on : 17th April 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை தனியார் காலணி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்கள் புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனர். நள்ளிரவு வரை தொடர்ந்த இந்தப் போராட்டத்தை தொழிலாளர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

    பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் காலணி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் தொழிலாளர்கள் பலருக்கு 10 மாதமாக ஊதியம் வழங்கவில்லை. அத்துடன் 2 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி நிர்வாகம் மின்சாரத்தை துண்டித்து தொழிற்சாலையை மூடியது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் திரளானோர் புதன்கிழமை மாலை வேலூரில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தர வலியுறுத்தி அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டம் நள்ளிரவை கடந்த நிலையில், தொழிலாளர் நல அலுவலர் ராமகிருஷ்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai