Enable Javscript for better performance
மனுக்களை உரிய ஆவணங்களுடன் அளிக்க பொதுமக்களுக்கு யோசனை- Dinamani

சுடச்சுட

    

    மனுக்களை உரிய ஆவணங்களுடன் அளிக்க பொதுமக்களுக்கு யோசனை

    By ஆற்காடு,  |   Published on : 17th April 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு நலத் திட்ட உதவி கேட்டு மனு கொடுக்கும் போது உரிய ஆவணங்களுடன் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால் கேட்டுக் கொண்டார்.

    ஆற்காடு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் ப.முருகேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கே.ரவி வரவேற்றார்.

    மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால் தலைமை தாங்கி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் 191 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 950 மதிப்பீட்டில் நலத் திட்டஉதவிகள் வழங்கி அவர் பேசியதாவது:

    பொது மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் மனுக்களை கொடுத்து விடுகின்றனர். அப்படி கொடுக்கக் கூடாது. உரிய ஆவணங்களுடன் மனுக்களை கொடுக்க வேண்டும். அரசு இ.சேவை திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம் இடைத் தரகர்கள் ஏமாற்ற முடியாது. அனைத்து ஆவணங்களுடன் மனுசெய்தால் வேண்டிய சான்றுகள் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் பாஹீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமகிருஷ்ணன், துணை ஆட்சியர் மதிவாணன், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் மணிலா, சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் இளஞ்செழியன், ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ப.முருகன், விஷாரம் வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai