Enable Javscript for better performance
மாநில சதுரங்கப் போட்டி: 12 வீரர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற 12 வீரர்கள், மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

    வேலூர் மாவட்ட சதுரங்கச் சங்கமும், குடியாத்தம் வானவில் விளையாட்டுக் கழகமும் இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தின.

    நிகழ்ச்சிக்கு செருவங்கி ஊராட்சி மன்றத் தலைவர் எம். மோகன் தலைமை வகித்தார். இரா.சி. தலித்குமார் வரவேற்றார். ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் எஸ். சுகுமார், அம்பேத்கர் சமூக நலப் பேரவைத் தலைவர் புலவர் சி. சுப்பிரமணியன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.

    இதில் 116 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 12 பேர் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

    அ. விஸ்வேஷ்வர், ச. செந்தமிழ்யாழினி ஆகியோர் முறையே ஆண்கள், பெண்களுக்கான பொதுப் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    16 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மாணவர் ஏ.பி. தருண், மாணவி ஜி. சினித்தியா, 13 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் ஏ. தட்சிணாமூர்த்தி, எஸ். ஸ்நேகா, 10 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் கே. நரசிம்மன், கே. சாருநேத்ரா ஆகியோர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

    திறந்த நிலைப் பிரிவுப் போட்டிகளில் வெற்றிபெற்ற 4 பேர் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கும், மாணவிகள் பிரிவில் வெற்றி பெற்ற 4 பேர் திருவாரூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கும், 13 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் வெற்றிபெற்ற 4 பேர் கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

    வெற்றிபெற்ற வீரர்களுக்கு எம்எல்ஏ கு. லிங்கமுத்து, நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம், தொழிலதிபர் ஸ்டாலின் முருகன் ஆகியோர் பரிசு, கோப்பைகளை வழங்கினர்.

    அம்பாலால் குழுமத் தலைவர் கே. ஜவரிலால் ஜெயின், கம்பன் கழக நிறுவனர் ஜே.கே.என். பழனி, நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம். பாஸ்கர், தலைமையாசிரியை ச. மீராபாய், முன்னாள் தலைமையாசிரியர் டி.எஸ். விநாயகம், நகர்மன்ற உறுப்பினர் ஆர். மூர்த்தி உள்ளிட்டோர் வெற்றிபெற்ற வீரர்களை வாழ்த்தி பேசினர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை வானவில் விளையாட்டுக் கழகச் செயலர் சு. சத்தியப் பூங்குழலி, இணைச் செயலர் பா. கவிநிலவன், உடற்கல்வி ஆசிரியர்கள் புனிதவதி, கே. மகேந்திரன், ஆர். குமரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai