Enable Javscript for better performance
ராஜீவ் கொலை வழக்கு ஆவணங்களை கோருகிறார் பேரறிவாளன்- Dinamani

சுடச்சுட

    

    ராஜீவ் கொலை வழக்கு ஆவணங்களை கோருகிறார் பேரறிவாளன்

    By வேலூர்  |   Published on : 17th April 2015 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மத்தியச் சிறையில் உள்ள ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதியான பேரறிவாளன், மாநில தகவல் ஆணையத்திடம், ராஜீவ் கொலை வழக்கு ஆவணங்களைக் கோரியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்று, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர், மாநில தகவல் ஆணையத்திடம் ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பான பல்வேறு ஆவணங்களைக் கோரி மனு செய்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து, வேலூர் மத்தியச் சிறையில் உள்ள பேரறிவாளனை விடியோ கான்ஃபரன்சிங் முறையில் மாநில தகவல் ஆணையர் ஸ்ரீபதி வியாழக்கிழமை காலை தொடர்பு கொண்டார்.

    பேரறிவாளன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ள ஆவணங்கள் குறித்து அவர் விளக்கம் கேட்டார். ராஜீவ் கொலை வழக்கில் பல்நோக்கு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பான ஆவணங்கள், கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் தனக்கு தேவை என பேரறிவாளன் கேட்டதாகத் தெரிகிறது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விடியோ-கான்ஃபரன்சிங் விசாரணைக்கு மாநில தகவல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று சிறைத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai