Enable Javscript for better performance
ரூ.1.92 கோடியில் ஏரியல் மின் பெட்டி பொருத்தும் பணி- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1.92 கோடியில் ஏரியல் மின் பெட்டி பொருத்தும் பணி

    By ஆம்பூர்,  |   Published on : 17th April 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூரில் ரூ.1.92 கோடியில் ஏரியல் மின் இணைப்புப் பெட்டி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு மின் வாரியத்தில் ஆர்ஏபிடிஆர்பி திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக ஆம்பூர் நகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.1.92 கோடி மதிப்பில் 980 ஏரியல் மின் இணைப்புப் பெட்டிகளைப் பொருத்த நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக ஆம்பூரில் ரெட்டிதோப்பு, மோட்டுகொல்லை, பஜார், கஸ்பா, கிருஷ்ணாபுரம், நேதாஜி சாலை, பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் இந்தப் பெட்டிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ஆம்பூர் உதவி செயற்பொறியாளர் எம்.நந்தகோபால் கூறுகையில், இந்தப் பணியால் அலுமினியம், தாமிரக் கம்பிகளின் இணைப்பு, மின் கம்பிகள் துண்டிப்பு ஆகிய பிரச்னைகள் தீர்க்கப்படும். நுகர்வோருக்குச் சீரான மின்சாரம் வழங்க இந்தப் பெட்டிகள் துணை புரியும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai