Enable Javscript for better performance
விஐடியில் தேசிய பேரிடர் மீட்புப் படை செயல்விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விஐடியில் தேசிய பேரிடர் மீட்புப் படை செயல்விளக்கம்

    By வேலூர்,  |   Published on : 17th April 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விஐடியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் செயல்விளக்க ஒத்திகை மாணவர்களுக்கு வியாழக்கிழமை செய்து காட்டப்பட்டது.

    பல்கலைக்கழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கான பேரழிவுப் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் பங்கேற்று பல்கலைக்கழகத்தின், அவசரகால மீட்புத் திட்டம் என்ற 3-ஆவது பதிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை 4-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் என்.கே.வர்மா பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், பூகம்பம், நில அதிர்வு போன்ற பேரழிவுகளின்போது உயரமான கட்டடங்களில் சிக்கியுள்ளவர்களையும், காயமடைந்து உயிருக்குப் போராடுவோரையும் மீட்பது குறித்த செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். இதைத் தொடர்ந்து விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் பேசும்போது, பேரிடர் மீட்புப் பணிகள் பற்றி கல்வி நிறுவனங்கள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai