Enable Javscript for better performance
ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டிங் ஆபீஸர் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டிங் ஆபீஸர் பொறுப்பேற்பு

    By அரக்கோணம்  |   Published on : 27th January 2015 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம், ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தின் கமாண்டிங் ஆபீஸராக கேப்டன் வினோத்குமார் பிஷரோடி திங்கள்கிழமை பொறுப்பேற்றார் .

    அரக்கோணம், ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படையின் விமா னதள கமாண்டிங் ஆபீஸராக இருந்த கமோடர் புனித்குமார் பஹெல் மாற்றப்பட்டுள்ளார். புதிய கமாண்டிங் ஆபீஸராக கேப்டன் வினோத்குமார் பிஷரோடி நியமிக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை குடியரசு தினவிழாவுக்கு முன்னதாக ஐ.என்.எஸ். ராஜாளி நிர்வாக அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட கேப்டன் வினோத்குமார் பிஷோரடி, படைவீரர்களின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

    கமோடர் புனித்குமார் பஹெல் பதவிஉயர்வு பெற்று, புதுதில்லியில் முப்படை அலுவலகத்தில் அட்மிரலாகப் பொறுப்பேற்க உள்ளார். இவரது காலத்தில் தான் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி இந்தியாவிலேயே சிறந்த கடற்படை விமானதளம் என்ற பெயர் பெற்றது.

    1989 ஜனவரியில் பணியில் சேர்ந்த பிஷரோடி, விமானியாகப் பயிற்சி பெற்றவர். கடற்படையில் விமானிகள் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் வான்பிரிவு கேப்டனாகப் பணிபுரிந்து வந்த பிஷரோடி தற்போது இதே தளத்தில் கமாண்டிங் ஆபீஸராகப் பொறுப்பேற்றுள்ளார்.

    தனது 25 வருட பணிக்காலத்தில் ஐ.என்.எஸ். சீட்டா கப்பலின் எக்ஸிகியூட்டிவ் அலுவலராகவும், ஐஎன்ஏஎஸ் 215 விமான ஸ்குவார்டனின் கமாண்டிங் ஆபீஸராகவும் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர் பிஷரோடி என்பது குறிப்பிடதக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai