Enable Javscript for better performance
குடியரசு தின விழாவில் 46 போலீஸாருக்கு முதலமைச்சரின் பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின விழாவில் 46 போலீஸாருக்கு முதலமைச்சரின் பதக்கம்

    By வேலூர்  |   Published on : 27th January 2015 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த 46 போலீஸாருக்கு முதலமைச்சரின் நற்பணி பதக்கம் அணிவிக்கப்பட்டது.

    நேதாஜி விளையாட்டரங்கில் காலை 8 மணிக்கு ஆட்சியர் இரா.நந்தகோபால் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். சிறப்பாக மாவட்டத்தில் பணியாற்றி வரும் 46 போலீஸாருக்கு முதலமைச்சரின் காவலர் நற்பணி பதக்கத்தை அணிவித்தார்.

    அதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கெüரவித்தார்.

    வேளாண்மைத் துறை சார்பில் பயனாளிகள் இருவருக்கு ரூ.1.08 லட்சம் மதிப்பிலான வேளாண்மை கருவிகள், வேளாண் பொறியியல் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தாட்கோ, விளையாட்டுத் துறை, வருவாய்த் துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்டவற்றின் சார்பில் 3 ஆயிரத்து 511 பயனாளிகளுக்கு ரூ.68.81 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    கலை நிகழ்ச்சிகள்

    இறுதியாக ராணிப்பேட்டை வி.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேலூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேலூர் ஈவெரா நாகம்மை மகளிர் மேல்நிலைப் பள்ளி, சென்னாங்குப்பம் வித்யா மெட்ரிக் பள்ளி, காட்பாடி ஜெயின் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் மாணவ, மாணவியர் 1,500 பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் தமிழ்சந்திரன், வேலூர் சிறை கண்காணிப்பாளர் மொஹமது அனீபா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி, மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கவனிக்க தவறிய அதிகாரிகள்

    வேலூரில் நடந்த குடியரசு தினவிழாவில் ஆண்டுதோறும் தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த தனி இடம் ஒன்று ஒதுக்கப்பட்டு அதில் தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அமர வைக்கப்படுவது வழக்கம்.

    ஆனால் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தியாகிகள் அல்லாத ஓய்வு பெற்ற ஆசிரியர், கட்சி பிரமுகர் உள்ளிட்டோரும் அமர வைக்கப்பட்டனர். அது தொடர்பாக அலுவலர்களிடம் சுட்டிக் காட்டியபோதும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஆட்சியர் சால்வை அணிவித்து கெüரவித்தார்.

    வேலூர் சிறையில்...

    வேலூர் மத்தியச் சிறையில் நடைபெற்ற விழாவில், வேலூர் சரக சிறைத் துறை துணைத் தலைவர் முகமது ஹனீபா தலைமையில் வேலூர் சிறை கண்காணிப்பாளர் வி.கருப்பண்ணன் தேசிய கொடி ஏற்றினார்.

    இதில் கூடுதல் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஜெயலர் கோ.தாமரைசெல்வன், முன்னாள் சிறைவாசிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் டி.எம்.விஜயராகவலு, செயலர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் பங்கேற்ற முன்னாள் சிறைவாசிகள் கார்த்திக், குமரவேல், பிரபு, மணிகண்டன், பெருமாள், மாறன் ஆகியோர் முன்னாள் சிறைவாசிகள் சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் ரூ.25 ஆயிரம் நிதியுதவி பெற்று சிறுதொழில் செய்து வருவதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.

    ராணிப்பேட்டையில்...

    ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் மு.பிரியதர்ஷினி தேசிய கொடியை ஏற்றினார். ராணிப்பேட்டை நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார்.

    குடியாத்தத்தில்...

    ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜசிம்மவர்மன் கொடியேற்றினார். நீதித்துறை நடுவர் கற்பகவல்லி, வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமிசுகுமாரன் கொடியேற்றினார்.

    அரக்கோணத்தில்...

    அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோ.மோகன் தேசியக்கொடியேற்றினார்.

    அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் சை.கண்ணதாசன் தேசியக் கொடியேற்றினார்.

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் பால்ராஜ்சீனிவாசன் தேசியக் கொடியேற்றினார்.

    தக்கோலத்தில்...

    சிஐஎஸ்எப்: தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு படையின் டிஐஜியும், மையத்தின் முதல்வருமான ஆனந்த்மோகன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    என்டிஆர்எப்: தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை தளத்தில் நடைபெற்ற விழாவில் படையின் கமாண்டண்ட் எம்.கே.வர்மா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார்.

    பேரூராட்சி: தக்கோலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரா.சுமா தலைமை தாங்கினார். பேருராட்சி மன்ற தலைவர் எஸ்.நாகராஜன் தேசியக்கொடியை ஏற்றினார்.

    வாணியம்பாடியில்...

    வாணியம்பாடி நகராட்சி அலுவகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகர்மன்ற தலைவர் நீலோபர்கபீல் தேசியக் கொடியை ஏற்றினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரவி, நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார், வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆம்பூரில்....

    ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தேசியக் கொடியேற்றினார். நகராட்சி ஆணையர் எஸ்.சசிகலா உள்ளிட்டவர்கள் உடன் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai