Enable Javscript for better performance
பெல் தொழிலக வளாகத்தில் 58 லட்சம் யூனிட் சூரிய மின்சக்தி உற்பத்தி - Dinamani

சுடச்சுட

    

    பெல் தொழிலக வளாகத்தில் 58 லட்சம் யூனிட் சூரிய மின்சக்தி உற்பத்தி

    By ராணிப்பேட்டை  |   Published on : 27th January 2015 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெல் தொழிலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் 58 லட்சம் யூனிட் பசுமை மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பெல் செயல் இயக்குநர் கெ.மைசயா திங்கள்கிழமை தெரிவித்தார்.

    ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சார்பில், பெல் ஊரக வளாகத்தில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நூற்றாண்டு விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை காலை நாட்டின் 66ஆவது குடியரசு தினவிழா நடைபெற்றது.

    விழாவில் பெல் நிறுவன செயல் இயக்குநர் கெ.மைசயா கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசியதாவது:

    பெல் தொழிலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகா வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 58 லட்சம் யூனிட் பசுமை மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நிறுவன சமூகப் பொறுப்புணர்வின் ஓர் அங்கமாக ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் பல பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை, சுற்றுச்சுவர் ஆகிய பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்று தெரிவித்தார்.

    இந்த விழாவில் பெல் நிறுவன பொது மேலாளர் (மனிதவளம்) சி.ராமையா, அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள், டி.ஏ.வி. பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளிகளின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai