Enable Javscript for better performance
லஞ்சம் வாங்கியதாக ஓட்டுநர் பயிற்சியாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    லஞ்சம் வாங்கியதாக ஓட்டுநர் பயிற்சியாளர் கைது

    By வாணியம்பாடி,  |   Published on : 27th January 2015 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூர் அங்கநாதவலசை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வம் (30) தனியார் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது நடத்துநர் (கன்டக்டர்) உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் பாபுவைத் (32) தொடர்பு கொண்டார். அதற்கு பாபு, உரிமம் புதுப்பிப்பதற்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளுக்கு கையூட்டாக ரூ.7500 வரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இறுதியாக, ரூ.6,500 கொடுத்தால் உரிமம் புதுப்பித்துத் தருவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு செல்வம் தகவல் அளித்தார். இதையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் எஸ்.பி. சுப்பிரமணியம், ஆய்வாளர்கள் பழனி, திருநாவுக்கரசு, அசோகன் மற்றும் போலீஸார் செல்வத்திடம் 6 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு ரூ.500 என மொத்தம் ரூ.6,500இல் ரசாயனம் கலந்து செல்வத்திடம் கொடுத்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அலுவலகத்தில் இருந்த பாபுவிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினர்.

    ரசாயனம் தடவிய பணத்தை செல்வத்திடமிருந்து பாபு ஞாயிற்றுக்கிழமை பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பாபுவை கையும் களவுமாகப் பிடித்தனர்.

    மேலும் பாபுவிடம் கைரேகையைப் பதிவு செய்து அவர் அலுவலகத்திலிருந்த ஆவணங்களைக் கைப்பற்றினர். பின்னர் வழக்குப் பதிவு செய்து பாபுவைக் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai