Enable Javscript for better performance
ஆன்மிகச் சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை, ஜன. 27: ராணிப்பேட்டை, ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில், "ஆழ்வார்களின் பக்தி நெறி' என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு லாலாப்பேட்டை, ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    இதில் தென்னிந்திய புரோகிதர் நலச்சங்க பொதுச்செயலாளர் ஆ.செ.நரசிம்ம அய்யர், அறக்கட்டளை ஆலோசகர் கே.எம்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீமத் பரமஹம்ஸ சம்பத் ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஆன்மிக உரை நிகழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசியர் ஜா.அருணாசலம், துரைப்பெரும்பாக்கம் கோதண்டராம ராமாநுஜதாஸன், ஆற்காடு பி.என்.ராஜேந்திரன், கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் நிர்வாகி விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆடிட்டர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai