Enable Javscript for better performance
ஆற்காட்டில் செஸ் போட்டி - Dinamani

சுடச்சுட

    

    வேலூர், ஜன. 27: பாரதி செஸ் அகாதெமி, ஜேசிஐ இணைந்து, ஆற்காட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான குடியரசு தின செஸ் போட்டியை நடத்தின.

    ஆற்காடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செஸ் கழகத் துணைத் தலைவர் தினகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செஸ் கழகத் தலைவர் ரெட்டி பிரசாத் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

    5, 7, 10, 16, 25 வயதுக்கு உள்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற 50 பேருக்கு கோப்பைகளும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai