Enable Javscript for better performance
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

    By வேலூர்  |   Published on : 28th January 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர், ஜன. 27: அறுபது வயது பூர்த்தியடைந்த நாளில் இருந்தே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய கட்டுமான அமைப்பு சாராத் தொழிலாளர் நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஆர்.டி.பழனி தலைமையில் வேலூரில் நடைபெற்றது. பொதுச் செயலர் எம்.முத்தியாலு, பொருளாளர் கே.சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளருக்கு நல வாரியம் மூலம் வீட்டு வசதி திட்டத்தையும், நலவாரிய மருத்துவமனை திட்டத்தையும் கொண்டுவர வேண்டும். வெளி மாநிலத் தொழிலாளர்களை கட்டணத்துடன் கட்டாயம் நல வாரியத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    60 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் முதிர்வு பெற்ற நாளில் இருந்தே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai