Enable Javscript for better performance
குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    Published on : 28th January 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர், ஜன. 27: வேலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி விடுமுறை அளிக்காத 91 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அரசு விடுமுறை நாள்களில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவர்களின் சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.

    அவ்வாறு சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை, சென்னை, தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா உத்தரவின்படி, மாவட்டத்தில் தொழிலாளர் ஆய்வாளர் ஆ.சண்பகராமன் மேற்பார்வையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

    இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 91 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் பி.வி.ஆறுமுகம், தா.ஆனந்தன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ச.சாவித்ரி, சீ.ஜெம்பகம், செ.முருகானந்தம், மு.ரங்கநாதன், ச.நித்தியகுமார், ஜெ.சுகுணா, மு.தட்சிணாமூர்த்தி, ந.ராமு ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai