Enable Javscript for better performance
கூட்டு குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பாமக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கூட்டு குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பாமக கோரிக்கை

    By அரக்கோணம்  |   Published on : 28th January 2015 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம், ஜன. 27: வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரக்கோணம் நகர பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

    அரக்கோணம் நகர பாமக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நகரச் செயலர் பொன்.வேலு தலைமை தாங்கினார். இதில், வேலூர் கிழக்கு மாவட்ட செயலர் க.சரவணன், மாவட்டத் தலைவர் அ.ம.கிருஷ்ணன், நகரத் தலைவர் பி.சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை பொது மக்களுக்கு இடைஞசல் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai