Enable Javscript for better performance
ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்; 20 நிமிடத்தில் சீரமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்; 20 நிமிடத்தில் சீரமைப்பு

    By வாணியம்பாடி  |   Published on : 28th January 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி, ஜன. 27:  வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து பெங்களூரு செல்லும் ரயில்வே இருப்புப் பாதையில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்துக்கும் பச்சூர் ரயில் நிலையத்துக்கும் இடையே வட்டகொல்லியில் தண்டவாளத்தில் சுமார் 4 அங்குல அளவில் விரிசல் இருப்பதை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு அப்பகுதி மக்கள் கண்டனர்.

    இதையடுத்து உடனடியாக சோமநாயக்கன்பட்டி மற்றும் பச்சூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்குத் தெரிவித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த சென்னை-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் சோமநாயக்கன்பட்டி அருகே நிறுத்தப்பட்டன. பின்னர் ஜோலார்பேட்டையிலிருந்து சென்ற ரயில் விபத்து தடுப்புக் குழுவினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாளத்தை சீர் செய்தனர் (படம்).

    இதையடுத்து சுமார் 20 நிமிடத்துக்குப் பின்னர் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai