Enable Javscript for better performance
டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது: ஆட்சியர்

    By அரக்கோணம்  |   Published on : 28th January 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம், ஜன. 27: வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார்.

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கூட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் மனோகர்சிங் தலைமை தாங்கினார். இதில் ஆட்சியர் இரா.நந்தகோபால் மேலும் பேசியதாவது: டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேலூர் மாவட்டத்தில் குறைவுதான் என்றாலும் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    குறைந்த தண்ணீரிலும் பரவும் தன்மையுடைய இத்தகைய கொசுக்கள் பகலில் கடிக்கும் தன்மை உடையவை. இதைத் தடுக்க சுகாதாரமான ஊராட்சியாக நமது ஊராட்சியை மாற்ற வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவர் நெமிலி கோமதி மணிவண்ணன், காவேரிப்பாக்கம் சரவணன், நெமிலி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சங்கர், நெமிலி ஒன்றிய ஆணையர் பால்குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    முன்னதாக தக்கோலம் பேரூராட்சிக்கு வந்த ஆட்சியர் இரா.நந்தகோபால், அங்கு நகரின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். மேலும் நகரின் சுகாதார நிலை குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ரா.சுமாவிடம் கேட்டறிந்தார்.

    தக்கோலம் வந்த ஆட்சியரை பேரூராட்சி மன்றத் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

    ஆட்சியருடன் பேரூராட்சிகள் துணை இயக்குநர் பழனியம்மாள், சுகாதாரத் துறை இணை இயக்குநர் பூங்கொடி, அரக்கோணம் வட்டாட்சியர் கோ.மோகன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai