Enable Javscript for better performance
தகவல் கையேடு வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர், ஜன. 27: வேலூர், வள்ளலார் (பகுதி 3) குடியிருப்போர் கூட்டமைப்பின் 20ஆம் ஆண்டு விழாவில் "தகவல் கையேடு- 2015' புத்தகம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

    குடியிருப்போர் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவிகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் எம்.தாமோதரன் வரவேற்றார். வேலூர் 2ஆவது மண்டலக் குழு தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம் விழாவில் பங்கேற்று, தகவல் கையேட்டை வெளியிட்டார்.

    முதல் பிரதியை மூத்த குடிமக்கள் ஒருங்கிணைப்பாளர் டி.ஹில்லல் ஜான்ஸன் பெற்றுக் கொண்டார். பகுதி 3இல் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பாராட்டு பெற்றனர்.

    மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளர் சி.தோப்பாசாமி நன்றி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai