Enable Javscript for better performance
தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குப் பாராட்டு

    By அரக்கோணம்  |   Published on : 28th January 2015 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம், ஜன. 27: அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்துக்கு அருகில் உள்ள நகரிக்குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படைத் தளம் செயல்பட்டுவருகிறது. சென்னையில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது மற்றும் ஜம்மு - காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகிய நிகழ்வுகளில் இங்கிருந்து சென்ற வீரர்கள் பெரும் சேவை ஆற்றினர்.

    இவர்களது சேவையைப் பாராட்டும் நிகழ்ச்சி அரக்கோணம் செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் அரக்கோணம் தளத்தின் கமாண்டண்ட் எம்.கே.வர்மாவிடம் பாராட்டுச் சான்றிதழ், விருது, நினைவுப் பதக்கம் ஆகியவற்றை அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி வழங்கினார் (படம்).

    இவ்விழாவில், பள்ளி மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் பள்ளித் தாளாளர் அமுதா செல்வம், செல்வம் கல்விக் குழுமத்தின் செயலர் கதிரவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai