Enable Javscript for better performance
பிரச்னைகளுக்கு இடையிலும் வளர்கிறது இந்தியா!: விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் - Dinamani

சுடச்சுட

    

    பிரச்னைகளுக்கு இடையிலும் வளர்கிறது இந்தியா!: விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன்

    Published on : 28th January 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும் இந்தியா வளர்ந்து வருவதாக, சுமைதாங்கி "நாக்'குழுமப் பள்ளிகளின் ஆண்டு விழாவில் தெரிவித்தார் விஐடி பலக்லைக்கழக வேந்தர்ஜி. விசுவநாதன்.

    வாலாஜாபேட்டையை அடுத்துள்ள சுமைதாங்கியில் இயங்கி வரும்"நாக்'  மெட்ரிக், வித்யாஷ்ரம் பள்ளிகளின் எட்டாம் ஆண்டு விழா நடைபெற்றது.

    பள்ளித் தாளாளர் எஸ்.சி.பிள்ளை தலைமை தாங்கினார்.  சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சந்திரா கைலாசம், மெட்ரிக். பள்ளி முதல்வர் பாவை கார்த்திகேயன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். சிபிஎஸ்இ பள்ளி துணை முதல்வர் பென்னி வரவேற்றார்.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் பேசியது:

    வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பாதிப் பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். இப்படி இளைஞர்கள் அதிகமுள்ள நாடு வேறேதும் கிடையாது.

    அதிகப் பிரச்னைகள் உள்ள நாடு இந்தியா. இங்கு 22 தேசிய மொழிகளுடன் 780 மொழிகள் பேசப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் மட்டும் 39 மொழிகள், 25 ஆயிரம் ஜாதிகள் உள்ளன. இவ்வளவுக்கும் மத்தியில் நாம் வளர்ந்திருக்கிறோம் என்றார்.

    பள்ளித் தாளாளரின் பெற்றோர் நினைவாக, கல்வி, விளையாட்டு, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகள் 24 பேருக்கு விழாவில் விருதுகள், ரூ. 1.03 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் நாகராஜன், முதன்மை செயலாளர் பார்வதி நாதன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai