Enable Javscript for better performance
பைக் - வேன் மோதல்: ஆசிரியை சாவு- Dinamani

சுடச்சுட

    

    , ஜன. 27: சோளிங்கர் அருகே மோட்டார் சைக்கிளும் வேனும் மோதிக் கொண்டதில் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

    சோளிங்கர் கணபதி தெருவைச் சேர்ந்தவர் சித்ரா (43). இவர் சோளிங்கரை அடுத்துள்ள கட்டாரிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

    குடியரசு தினத்தையொட்டி சித்ரா பள்ளிக்கு திங்கள்கிழமை சென்றார். புலிவலம் பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அம்மூரைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவரது பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றுள்ளார். பள்ளி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மினி வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சித்ரா, மணிகண்டன் ஆகிய இருவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து கொண்டபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai