Enable Javscript for better performance
மாமனார் கொலை: மருமகனுக்கு வலை - Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை, ஜன. 27: குடும்பத் தகராறில் மாமனாரைக் கொலை செய்த மருமகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

    ஆற்காடு, பூபதி நகரை சேர்ந்தவர் ஞானசேகரன், இவரது மகள் நவீனா (21), இவருக்கும் ராணிப்பேட்டையை அடுத்த காரை கணேஷ் (30) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து நவீனாவும், அவரது தந்தை ஞானசேகரனும் கணேஷிடம் சென்று, சேர்ந்து வாழ்வது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தினர்.  அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறின்போது ஞானசேகரனைப் பிடித்து சுவற்றில் தள்ளி கணேஷ் தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த ஞானசேகரன், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து ஞானசேகரனின் மகள் நவீனா ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கணேஷைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai