Enable Javscript for better performance
மார்ச் 13இல் கின்னஸ் சாதனை முயற்சி தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பேருக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 13இல் கின்னஸ் சாதனை முயற்சி தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பேருக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை

    By ராணிப்பேட்டை  |   Published on : 28th January 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை, ஜன. 27: லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு, பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில், மார்ச் 13இல் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பேருக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட சிறப்புக் கூட்டம், ராணிப்பேட்டை பாரி தொழிலாளர் நலச் சங்கக் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் எஸ்.பழனி தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ஜே.சாமுவேல், கே.ராஜேந்திரன், துணைச் செயலாளர் எம்.வினோத், பொருளாளர் கே.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எஸ்.ஜார்ஜ் ஸ்டீபன் வரவேற்றார்.

    இதில் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பெ.காளிதாசன், மாநிலத் தலைவர் எல்.துரைசாமி, பொருளாளர் எஸ்.சம்பத்குமார், போராட்டக்குழுத் தலைவர் தா.வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

    தொடர்ந்து வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு, கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். லேப் அல்லாத மருந்துக் கடைகளில் சர்க்கரை நோய் கண்டறிவது தடை செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    மேலும் மார்ச் 13 லேப் டெக்னீசியன் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் அன்று தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பேருக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கின்னஸ் சாதனை படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai