Enable Javscript for better performance
ரயிலில் பெண்ணின் நகையைப் பறித்த  இளைஞரைப் பிடித்த பயணிகள்- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் பெண்ணின் நகையைப் பறித்த  இளைஞரைப் பிடித்த பயணிகள்

    By வேலூர்  |   Published on : 28th January 2015 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர், ஜன. 27: வேலூர் அருகே ரயிலில் பெண்ணிடமிருந்து ஐந்தரை சவரன் நகையைப் பறித்த இளைஞரை ரயில் பயணிகள் பிடித்து காட்பாடி ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    வேலூர் தாலுகா, செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. போளூர், சேகரம்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில் சென்றார்.

    ரயில் பென்னாத்தூர் ரயில்வே கேட்டில் நின்றது. அப்போது அமுதாவின் அருகே வந்த இளைஞர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த  ஐந்தரை சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினார். அமுதா கூச்சலிட்டதை அடுத்து சக பயணிகள் ரயில் பெட்டியில் இருந்து இறங்கி அந்த இளைஞரை விரட்டினர். தப்பியோடிய அந்த இளைஞர் ஜல்லி கற்கள் மீது விழுந்து காயமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரைப் பிடித்த  பயணிகள் காட்பாடி ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இளைஞர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த கார்த்தி (27) என்பது தெரியவந்தது.

    காயமடைந்த கார்த்தி, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai