Enable Javscript for better performance
வங்கிகளின் பாதுகாப்புக்கு காவல் துறை ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    வேலூர், ஜன. 27: வேலூர் மாநகரில் உள்ள வங்கிகளில் இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றுமாறு வங்கி மேலாளர்களை டிஎஸ்பி பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

    வேலூர் தனியார் மண்டபத்தில் வங்கிக் கிளை மேலாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் விவரம்:

    வங்கிகளில் தரமான பதிவு செய்யக் கூடிய சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். அத்துடன் எச்சரிக்கை அலாரம் எப்போதும் செயல்படும் வகையில் பராமரிக்க வேண்டும்.  வங்கிக் கிளை அமைந்துள்ள கட்டடத்தின் பின்பகுதி காலியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் திடகாத்திரமான பாதுகாவலர்களை பாதுகாப்புப் பணியில் நியமிக்க வேண்டும்.

    வங்கிகள் உள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்துப் பிரிவு கண்காணிப்புப் பணியை மேற்கொள்வர். அவர்கள் வங்கிக் கிளைக்கு வந்து சென்றதற்கான பதிவுப் புத்தகத்தை வங்கிகளில் பராமரிக்க வேண்டும். வங்கிக் கிளை முன்பும் பக்கவாட்டிலும் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    அரக்கோணத்திலும் ஆலோசனை: அரக்கோணம் வட்டார வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி அரக்கோணம் டிஎஸ்பி கண்ணப்பன் பல அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் அதிகாரிகள், நகைக்கடைகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai