Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அதிமுகவுக்கு திமுமுக ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அதிமுகவுக்கு திமுமுக ஆதரவு

    By வேலூர்  |   Published on : 28th January 2015 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர், ஜன. 27: ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவது என திராவிட முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (திமுமுக) தீர்மானம் நிறைவேற்றியது.

    இதன் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலர் ஜி.எஸ்.இக்பால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதியின் வெற்றிக்காக 7 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

    காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai