Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

    குடியாத்தத்தை அடுத்த சிங்கல்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் செல்லும் தொலைக்காட்சி கேபிள் ஒயரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் தூக்கில் தொங்கியவாறு இருப்பதாக அப்பகுதி மக்கள்  போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.எம்.சங்கரன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அவரை யாரோ கொலை செய்து, சடலத்தைக் கொண்டு வந்து அங்கு கேபிள் ஒயரில் தூக்கிட்டுச் சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். அந்த இளைஞரின் உடலில் காயங்கள் இருந்தன.

    இதுகுறித்து, குடியாத்தம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai