Enable Javscript for better performance
அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் தொகுதி அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் குடியாத்தத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபனை அறிமுகம் செய்து வைத்து, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:

    தேர்தல் பணியின்போது அதிமுகவினர், எதிர்க் கட்சியினரை விமர்சித்துப் பேச வேண்டாம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு செய்த நலத் திட்டங்களையும், சாதனைகளையும் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    அதிமுகவில் மட்டும் தான் சாதாரணத் தொண்டர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.  இந்தத் தொகுதி, கூட்டணிக்குச் சென்று விடும் என மனக் கவலையில் இருந்தீர்கள். அதை மாற்றி கட்சி வேட்பாளரை முதல்வர் ஜெயலலிதா இங்கு களம் இறக்கியுள்ளார்.

    இதுவே நமக்கு முதல் வெற்றி.

    வேலூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை இந்தத் தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும் என்றார் வீரமணி.

    கூட்டத்துக்கு தொகுதிச் செயலர் பொகளூர் டி.பிரபாகரன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி வரவேற்றார். கிழக்கு மாவட்டச் செயலர் வி.ராமு, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai