Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசியல் கட்சிகளின் சார்பாக அம்பேத்கரின் 126-ஆவது பிறந்த தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

    ஆம்பூரில், எம்ஜிஆர் கழகம் சார்பில் அதன் வேலூர் மாவட்ட செயலாளர் பெ.சிவகுமார் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் டி.எம்.தட்சிணாமூர்த்தி தலைமையில், வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் கே.குப்புசாமி மாலை அணிவித்தார். 

    அம்பேத்கர் சிலை அமைப்பு கமிட்டி சார்பில் அதன் தலைவர் ராஜகுரு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

    வாணியம்பாடியில்: வாணியம்பாடி, கோணாமேடு பகுதியில் உள்ள அம்பேத்கர்  சிலைக்கு நகர்மன்றத் தலைவரும், வாணியம்பாடி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளருமான நீலோபர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நகர்மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர் நந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் நகர மதிமுக சார்பில் அதன் செயலாளர் அ.நாசிர்கான் அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர காங்கிரஸ் சார்பில் எஸ்சி,எஸ்டி பிரிவு நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் சாந்தகுமார் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அரக்கோணத்தில்: அரக்கோணம் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் துரை குப்புசாமி தலைமை வகித்தார்.

    அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் கோ.சி.மணிவண்ணன் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    நெமிலி நகர அதிமுக சார்பில் நெமிலியில் நடைபெற்ற விழாவுக்கு நகர அதிமுக செயலர் குமார் தலைமை வகித்தார்.

    இதில் சோளிங்கர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    நெமிலி ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நெமிலி ஒன்றிய திமுக செயலர் வடிவேலு தலைமை வகித்தார்.

    இதில் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் வி.பவானி அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.

    ராணிப்பேட்டையில்: வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முத்துகடை பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி கலந்துகொண்டு அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் மாவட்டச் செயலாளர் சார்லஸ் தலைமையில் தேமுதிக மாவட்டச் செயலாளர் பூட்டுத்தாக்கு நித்தியா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முத்துகடை, ஜெயராம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைகளுக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai