Enable Javscript for better performance
ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தானில் ஸ்ரீநிவாச கல்யாண உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தானில் ஸ்ரீநிவாச கல்யாண உற்சவம்

    By திருப்பதி  |   Published on : 15th April 2016 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் இம்மாதம் 14- 26 தேதிகளில் ஸ்ரீநிவாச கல்யாண உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

     திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீநிவாச கல்யாண உற்சவத் திட்டத்தின் கீழ், உலகம் முழுவதும் ஸ்ரீநிவாச  கல்யாணங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இம்மாதம் ஆந்திரம், தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் ஏழு இடங்களில் ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெற உள்ளது.

     14-ஆம் தேதி- ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டம், சஞ்சோர் பாதமேட கிராமத்தில் ஸ்ரீகோபால் கோவர்தன் கோசாலை வளாகம், 16-ஆம் தேதி- ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பீலேரில் உள்ள சந்தைக்கடை வளாகம், 17-ஆம் தேதி- கடப்பா மாவட்டம், வீரபல்லி யாடபல்லியில் உள்ள ஸ்ரீராமர் கோயில்,  23-ஆம் தேதி குண்டூர் மாவட்டம், சந்தைக்கடை வளாகம், 26-ஆம் தேதி- கர்ணூல் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுத் திடல், அதேநாளில்- தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம், மிர்யாலகூடாவில் உள்ள அரசு பள்ளி மைதானம், 26-ஆம் தேதி- தேவரகொண்ட சந்தைக்கடை வளாகம் ஆகிய இடங்களில் ஸ்ரீநிவாச கல்யாண உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai