Enable Javscript for better performance
ஆற்காடு கோயிலில் சித்திரைப் பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், அறுபடை முருக பக்தர்களின் பக்தி இசையும் நடைபெற்றது.

    தொடர்ந்து, சோமாஸ்கந்த வீதி உலாவும் தொண்டை மண்டல சிவத்தொண்டர் திருச்சபையினரால் சொற்பொழிவும் நடைபெற்றன.

    விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழு தலைவர் கு.சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai