Enable Javscript for better performance
உரிய ஆவணம் இல்லாத 21 டன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி அருகே உரிய ஆவணமின்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட 21 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    நாட்டறம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை இரவு குப்பம் சாலை சுங்கச்சாவடி பகுதி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், எவ்வித ஆவணமுமின்றி வாணியம்பாடியிலிருந்து எர்ணாகுளம் நோக்கி 21 டன் அரிசி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் ராஜேந்திரனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai