Enable Javscript for better performance
ஊர்க்காவல் படைப் பிரிவு அலுவலகம் திறந்து வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊர்க்காவல் படைப் பிரிவு அலுவலகம் திறந்து வைப்பு

    By ராணிப்பேட்டை  |   Published on : 15th April 2016 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் ஊர்க்காவல் படைப் பிரிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக ஊர்க்காவல் படைப் பிரிவுக்கென தனி அலுவலகம் ராணிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் உமா சங்கர், ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டர் சுரேஷ், வேலூர் ஊர்க்காவல் படை கமாண்டர் குமாரன், மண்டல கூடுதல் கமாண்டர் நிர்மலா கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஊர்க்காவல் படைப் பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார். அப்போது, அவர் ஊர்க்காவல் படையினரின் நலனில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்றார்.

    ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாங்கம், ராணிப்பேட்டை ஊர்க்காவல் படைப் பிரிவு கமாண்டர் என்.பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் ஊர்க்காவல் படைப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற உள்ள பெருமாள் கௌரவிக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai