Enable Javscript for better performance
\\\"சாதனைகளை சொன்னாலே வெற்றி நிச்சயம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டாலே வெற்றி பெறுவது நிச்சயம் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

    காட்பாடி தொகுதி அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தொகுதிச் செயலாளர் பிச்சாண்டி பாபு தலைமை வகித்தார்.

    அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்புவை அறிமுகம் செய்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:

    அதிமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டாலே வெற்றி நிச்சயம். அனைத்து தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதாவே போட்டியிடுவதாக நினைத்து கட்சியினர் களப் பணியாற்ற வேண்டும் என்றார்.

    எம்.பி.க்கள் செங்குட்டுவன், அரி, மாநகராட்சி மேயர் பா.கார்த்தியாயினி, கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.ராமு உள்ளிட்டோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai