Enable Javscript for better performance
சூப்பர் நேஷன் பார்ட்டி: தனித்துப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூரில் சூப்பர் நேஷன் பார்ட்டி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கலீல் ரஹ்மான் தெரிவித்தார்.

    ஆம்பூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திந்த  அவர் மேலும் கூறியதாவது:

    சில மாதங்களுக்கு முன் ஆம்பூருக்கு அவப்பெயர் ஏற்படக்கூடிய சம்பவம் நடந்தது. இந்த அவப்பெயரை களையும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. மேலும் கல்வி, மருத்துவ வசதிகளை மக்களுக்கு இலவசமாக ஏற்படுத்தித் தர வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்ற நோக்கில் எங்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.

    அதனால் ஆம்பூர் தொகுதியில் சூப்பர் நேஷன் பார்ட்டி தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளராக நானே தொகுதியில் போட்டியிடுகிறேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai