Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By வேலூர்  |   Published on : 15th April 2016 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புத்தாண்டையொட்டி வேலூரில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

    ஸ்ரீபுரம் பொற்கோயிலில், நாராயணி சன்னிதி முன் 1,008 கிலோ பழங்களால் பழப்பந்தல் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தவர்களுக்கு சக்தி அம்மா அருளாசி வழங்கினார்.

    அதேபோல, வேலூர் லாங்கு பஜாரில் உள்ள பாண்டுரங்க பக்த மண்டலியில் பாண்டுரங்க சுவாமி, ருக்மணி தேவிக்கு முன் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

    வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai