Enable Javscript for better performance
திருமலையில் பக்தர்கள் உடைமாற்ற  புதிய கூடம் அமைக்கத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருமலையில் பக்தர்கள் உடைமாற்ற  புதிய கூடம் அமைக்கத் திட்டம்

    By திருப்பதி  |   Published on : 15th April 2016 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமலையில் ரூ. 300 விரைவு தரிசன பக்தர்கள், உடைமாற்றிக் கொள்ள புதிய கூடத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

     திருமலை ஏழுமலையானை விஐபி பிரேக் தரிசனம், ரூ. 300 விரைவு தரிசனம், ரூ. 50 சுதர்சன தரிசனம், ஆர்ஜித சேவைகளில் தரிசிப்பவர்கள் அனைவரும் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

     அதன்படி, ஆண் பக்தர்கள், வேட்டி, சட்டை, மேல் துண்டு, குர்தா- பைஜாமா ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். பெண் பக்தர்கள், சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிய வேண்டும்.

     ஆனால், இணையதளம் மூலம் விரைவு தரிசனச் சீட்டு முன்பதிவு செய்துகொண்டு வரும் பக்தர்கள், இதை அறியாமல் வருவதால், திருமலைக்கு வந்தவுடன் உடைமாற்றிக் கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக, தரிசன வரிசை அருகிலேயே உடை மாற்றிக்கொள்ள ஒரு கூடத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

     அனைத்து மாநிலங்களிலும் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் வருகை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, ஏப்ரல் 15 முதல், ஜூன் 30 வரை வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் விஐபி பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai