Enable Javscript for better performance
தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி - Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

    சட்டப்பேரவைத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப் பதிவு இருக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.செல்வராசு தலைமை வகித்தார்.

    இதில் கலை நிகழ்ச்சிகள், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மத்திய தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் கஞ்சன் பிரசாத், மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை வருவாய்க் கோட்ட அலுவலர் பா.முருகேசன், ஆற்காடு வட்டாட்சியர் சாந்தி, உதவித் தேர்தல் அலுவலர் பிரியா, துணை வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai