Enable Javscript for better performance
மேலாளரை பணி நீக்கம் செய்யக் கோரி  பெண் தொழிலாளர்கள் 3-ஆவது நாளாக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மேலாளரை பணி நீக்கம் செய்யக் கோரி  பெண் தொழிலாளர்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

    By ஆம்பூர்  |   Published on : 15th April 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் அருகே பெண் தொழிலாளர்களை தரக்குறைவாகப் பேசியதாக, அங்கு பணிபுரியும் மனிதவள மேலாளரை பணி நீக்கம் செய்யக் கோரி பெண் தொழிலாளர்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை, அதே நிறுவனத்தில் பணிபுரியும் மனிதவளத் துறை மேலாளர் தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து நிர்வாகத்திடம்  பலமுறை புகார் தெரிவித்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் மேலாளரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை. அவர் மீது உரிய விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பணி நீக்கம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் அவரை பணி நீக்கம் செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai