Enable Javscript for better performance
யாருக்கு ஓட்டு?- Dinamani

சுடச்சுட

    

    ஏ.ஆர்.எஸ்.சங்கர்

    லாரி உரிமையாளர், முத்துக்கடை 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அனைத்துத் தரப்பு மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு, அவற்றை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தும் கட்சிக்கே ஓட்டளிப்பேன்.

     

     

    கே.வெங்கடேசன் 

    ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை, ராணிப்பேட்டை

     மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்வதில் முன்னுரிமை அளிப்பது, தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுகளைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது, இளைஞர்களுக்கு நமது கலாசாரத்தை கற்றுத் தந்து நல்வழியில் நடக்க வழிவகை செய்ய முன்வரும் வேட்பாளருக்கே எனது வாக்கு.

     

     

    பி.அரவிந்த்குமார்

    கராத்தே பயிற்சியாளர்,ராணிப்பேட்டை

    மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்

    கூடியவராகவும், சாதாரண மக்களும் எளிதில் சந்திக்கும் வகையிலும் உள்ளவராக இருக்கும், மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டுப் பயிற்சிக் கூடம் அமைப்பதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே எனது ஓட்டு.

     

     

    து.ரஞ்சித்

    கல்லூரி மாணவர், மலைமேடு

    மாவட்டத்தில் படித்த திறமையுள்ள இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சென்று அவதிப்படும் நிலையை மாற்ற, சிப்காட் தொழிற்பேட்டையில் மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகளைத் திறக்கவும், புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கும் வேட்பாளருக்கே எனது வாக்கு.

     

    த.பெரியசாமி

    விவசாயி, ஏரிமுன்னூர்

    விவசாயத்தை மேம்படுத்தி, விளைபொருளுக்கு உரிய விலையை  நிர்ணயிக்கும் உரிமையை விவசாயிகளுக்கு வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக உறுதியளிக்கும் கட்சி வேட்பாளருக்கே வாக்களிப்பேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai