Enable Javscript for better performance
ரூ. 9 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    வேலூரில், வேனில் எடுத்து வரப்பட்ட ரூ. 9 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டதில் சென்னையிலிருந்து வேலூருக்கு எடுத்து வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 130 பெட்டிகளில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 9 லட்சமாகும்.

    இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai