Enable Javscript for better performance
வாகனச் சோதனையில் 470 சிமென்ட் மூட்டைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    வாகனச் சோதனையில் 470 சிமென்ட் மூட்டைகள் பறிமுதல்

    By குடியாத்தம்  |   Published on : 15th April 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேர்ணாம்பட்டு அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி லாரியில் எடுத்து வரப்பட்ட 470 சிமென்ட் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர், பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், ரூ. 1.41 லட்சம் மதிப்பிலான 470 சிமென்ட் மூட்டைகள் இருந்ததும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

    இதையடுத்து, அந்த மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடியாத்தம் நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆற்காட்டில்: ஆற்காடு தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு தலைமையில், பூங்கோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அங்கு வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், 25 கிலோ எடைகொண்ட 1,001 அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், பூங்கோடு பகுதியில் வந்த மற்றொரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது திருவண்ணாமலையில் இருந்து உரிய ஆவணங்களின்றி சென்னையில் உள்ள கார்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு கட்பீஸ் துணிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதனை வேனுடன் பறிமுதல் செய்தனர். பின்னர், உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதன் பேரில் லாரியும், வேனும் பொருள்களுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அரக்கோணத்தில்: அரக்கோணம் வட்ட வருவாய் ஆய்வாளர் அருள்செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், தணிகைபோளூரில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, பெங்களூரில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டனர். இதில், ரூ. 3.55 லட்சம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai