Enable Javscript for better performance
வேலூர் தொகுதியில் 26 ஆண்டுக்குப் பிறகு திமுக, அதிமுக நேரடிப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் தொகுதியில் 26 ஆண்டுக்குப் பிறகு திமுக, அதிமுக நேரடிப் போட்டி

    By வேலூர்  |   Published on : 15th April 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக, திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளதால் தேர்தல் பணியில் இரு கட்சியினரும் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக, அதிமுக இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, ஆற்காடு, ராணிப்பேட்டை, குடியாத்தம், கே.வி.குப்பம், திருப்பத்தூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய 10 தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக களம் இறங்கியுள்ளன.

    இதில், வேலூர் தொகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் வி.எம்.தேவராஜ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக (ஜெ) அணி சார்பில் ப.நீலகண்டன் களம் இறக்கப்பட்டார். இத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.எம்.தேவராஜ் 19,360 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

    அதன்பிறகு நடந்த தேர்தல்களில் திமுக, அதிமுக கூட்டணியில் மாறி மாறி அங்கம் வகித்த காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வேட்பாளராக களம் இறங்கிய சி.ஞானசேகரன் தொடர்ந்து 1991, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

    கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.ஞானசேகரன், இத்தொகுதியில் களம் இறங்கிய அதிமுக வேட்பாளர் வி.எஸ்.விஜயிடம் 15,176 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

    இந்நிலையில், தற்போது நடக்கவுள்ள தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கியிருப்பதால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தொகுதியில் நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai