சுடச்சுட

  

  நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை: எம்எல்ஏ வலியுறுத்தல்

  By ஆம்பூர்  |   Published on : 07th August 2016 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்க வேண்டுமென ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணி கோரிக்கை விடுத்தார்.

  சட்டப்பேரவையில் அண்மையில்அவர் பேசியதாவது:

  ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைத்துத் தர வேண்டும். பிரதான கடைக்கும், பகுதி நேர கடை அமைக்க வேண்டிய இடத்துக்கும் 5 கி.மீ. தொலைவு உள்ளது. பிரதான கடையிலிருந்து பிரிக்கப்படும் பகுதி நேர கடை அமைய உள்ள பகுதியில் 100 குடும்ப அட்டைகள் இருக்க வேண்டும்.

  ஆனால் 135 அட்டைகள் உள்ளன. அதனால் அப்பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கா.ராஜூ அளித்த பதில் :

  துறை ரீதியாக ஆய்வு செய்து அங்கு பகுதிநேர நியாய விலைக் கடை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுமென அவர் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai