சுடச்சுட

    

    பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பால்குட ஊர்வலம்

    By ராணிப்பேட்டை  |   Published on : 07th August 2016 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாக சதுர்த்தி விழாவையொட்டி, ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் உள்ள இக்கோயிலில், ஆண்டுதோறும் நாக சதுர்த்தியையொட்டி, பால்குட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குமாரசாமி மடத்தில் இருந்து சனிக்கிழமை காலை ஊர்வலம் புறப்பட்டது.

    இதில் ராணிப்பேட்டை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி வந்தனர். இதைத் தொடர்ந்து மகா பிரத்யங்கிரா தேவிக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai