நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை: எம்எல்ஏ வலியுறுத்தல்

நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்க வேண்டுமென ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணி கோரிக்கை விடுத்தார்.

நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்க வேண்டுமென ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணி கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் அண்மையில்அவர் பேசியதாவது:

ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைத்துத் தர வேண்டும். பிரதான கடைக்கும், பகுதி நேர கடை அமைக்க வேண்டிய இடத்துக்கும் 5 கி.மீ. தொலைவு உள்ளது. பிரதான கடையிலிருந்து பிரிக்கப்படும் பகுதி நேர கடை அமைய உள்ள பகுதியில் 100 குடும்ப அட்டைகள் இருக்க வேண்டும்.

ஆனால் 135 அட்டைகள் உள்ளன. அதனால் அப்பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கா.ராஜூ அளித்த பதில் :

துறை ரீதியாக ஆய்வு செய்து அங்கு பகுதிநேர நியாய விலைக் கடை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுமென அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com